2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

வேப்பலோடை அரசுப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம்

வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

Published On :

வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு பள்ளித் தலைமையாசிரியர் சேகர் தலைமை வகித்தார்.  ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ்,  அன்னை தெரசா கிராம பொதுநல சங்க பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உதவி தலைமை ஆசிரியர் புளோரிடா வரவேற்றார். 
கூட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து நிகழாண்டு 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று பள்ளியின் இலக்கை அடைய அனைவரும் பாடுபட வேண்டும்.  கிராமப்புறங்களில் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், சங்கரநாராயணன்,  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் செல்வம், கருப்பசாமி, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  ஆசிரியர் கிரேஸ்லின் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.