தூத்துக்குடி மாநகரில் ஆகஸ்ட் 18 மின்தடை

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 18) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 18) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது. எனவே,  தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி சாலை, ஜார்ஜ் சாலை, வி.இ. சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், மில்லர்புரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிதம்பரநகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார் புரம், திருச்செந்தூர் சாலை, கணேசன்நகர், கால்டுவெல் காலனி, பக்கிள்புரம், சிஜி காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல்பிற்பல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி பகுதியில்...
கோவில்பட்டி கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஆக. 18) மின் விநியோகம் இருக்காது. 
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சனிக்கிழமை (ஆக. 18)  காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் தடைபடும் பகுதிகள்:  கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முஹம்மதுசாலிஹாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி; விஜயாபுரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி; 
சிட்கோ துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட முத்துநகர், சிட்கோ, ஜோதி நகர், புதுரோடு; சிவஞானபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைதாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி. 
பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் பகுதிகள்: கழுகுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம்; எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி; எம்.முத்துசாமிபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைச்செவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி; செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம்; சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின் தொடர் 1, 2  ஆகிய பகுதிகள்.
 எட்டயபுரம், கடலையூர் பகுதியில்:  எட்டயபுரம் மற்றும் கடலையூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.18) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
   எட்டயபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 33 கிலோ வோல்ட்டு மின்னூட்டிக்குப் பதிலாக புதிய 33  கிலோ வோல்ட் மின்னூட்டி அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ளதையடுத்து எட்டயபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எட்டயபுரம், சிந்தலக்கரை, நாவலக்கம்பட்டி, குமரெட்டியாபுரம், துரைச்சாமிபுரம், கீழஈரால், இளம்புவனம், பிதப்புரம், குமாரகிரி, புதூர் மற்றும் கடலையூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கடலையூர், பீக்கிலிபட்டி, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், அய்யாக்கோட்டையூர், முத்தலாபுரம், வீரப்பட்டி, கருப்பூர், மேலநம்பியாபுரம், அருணாசலபுரம், வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.18)  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.