கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சாத்தான்குளம் அருகே விபத்தில்  காயமடைந்த இளைஞர் சாவு

சாத்தான்குளம் அருகே  விபத்தில் காயமடைந்த இளைஞர்  திங்கள்கிழமை உயிரிழந்தார்..

Updated On :25 டிசம்பர் 2018, 7:19 am IST

சாத்தான்குளம் அருகே  விபத்தில் காயமடைந்த இளைஞர்  திங்கள்கிழமை உயிரிழந்தார்..
சாத்தான்குளம் அருகே உள்ள அன்பின்நகரை சேர்ந்தவர் பொ. மிகாவேல்(23),  தொழிலாளி. இவர்,  அவரது உறவினரான பள்ளி மாணவர் கு. டேவிட் பட்டுராஜுடன்(16)  ஞாயிற்றுக்கிழமை  மாலை மணிநகருக்கு பைக்கில் சென்றனர்.  அடைக்கலாபுரம் பகுதியில் பைக் சென்றபோது சாலையில் நாய் குறுக்கே சென்றதாம். இதனால் நிலைகுலைந்த இருவரும் பைக்கில் இருந்து தவறிவிழுந்து காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும்   சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக , திருநெல்வேலி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு மிகாவேல், திங்கள்கிழமை காலை இறந்தார். டேவிட்பட்டுராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர்  கஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து  வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.