தூத்துக்குடி மேலூர் சக்திபீடத்தில் கல்வி அறிவு சிறக்கவும், மாணவ, மாணவிகளின் தேர்வு பயம் நீங்கவும் சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகேயுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் தைப்பூச பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர் பூஜை, குருபூஜை, சக்திபூஜையுடன் தொடங்கியது. சக்கரம், முக்கோணம், அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு அதில் கல்வி உபகரணங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.
கல்வி அறிவு சிறக்கவும், மாணவ, மாணவிகளின் தேர்வு பயம் நீங்கவும் வேண்டி சிறப்பு சங்கல்பம் செய்யப்பட்டது. இதில், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு குங்குமத்தாலும், மலர்கள் கொண்டும் அர்ச்சனை செய்து கலச விளக்கு வேள்வி பூஜை செய்து வழிபட்டனர். சக்திபீட தலைவர் முத்துக்குமார் வேள்வியை தீபம் ஏற்றி தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து பக்தர்கள் அன்னை ஆதிபராசக்திக்கு இளநீர் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை சக்திபீட மகளிர் அணி தலைவி சரஸ்வதி மருதநாயகம் தொடக்கி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். 21 வகையான சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு பக்தர்கள் பூச்சொரிதல் செய்து வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.