தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற பாவை விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி சிதம்பரநகர் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளியில், மாவட்ட அளவிலான 18 ஆவது பாவை விநாடி-வினா போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. போட்டியை காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முரளி நடத்தினார். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள பிரிவில், சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள பிரிவில் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி முதலிடத்தையும், கமலாவதி பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பேராசிரியர் முரளி பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் கனகராதா, துணை முதல்வர் விஜயலட்சுமி, தலைமையாசிரியை விமலா, ஆசிரியை முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.