தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளம் அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா தொடக்கம்

சாத்தான்குளம் அருள்மிகு  தேவி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி  அம்மன் கோயிலில்  மகா சிவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:02 am

DIN

சாத்தான்குளம் அருள்மிகு  தேவி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி  அம்மன் கோயிலில்  மகா சிவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை,  அபிஷேகம்,  அலங்கார பூஜை, தொடர்ந்து கொடியேற்றம்,  அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இரவு  அலங்கார பூஜை நடைபெற்றது. 4ஆம் திருவிழாவான பிப். 7ஆம் தேதி வருஷாபிஷேகமும், 8ஆம் திருவிழாவான பிப்.  11ஆம் தேதி திருவாசகம் முற்றோதுதல், அலங்கார பூஜை,  இரவு அருள்மிகு தேவி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி  அம்மன் ரதவீதி உலா வருதல், தொடர்ந்து அன்னதானம் வழங்குதல் நடைபெறுகிறது. 
9ஆம் திருவிழாவான பிப். 12ஆம் தேதி மாலையில் திருவிளக்கு பூஜையும்,  இரவு  மாக்காப்பு பூஜையும்  நடைபெறுகிறது. 10ஆம் நாளான பிப். 13ஆம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு யாகசாலை பூஜையைத் தொடர்ந்து  நான்குகால பூஜை நடைபெறுகிறது.  நிறைவு நாளான பிப். 14ஆம் தேதி அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. 
ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வி.எஸ்.எம். முருகன் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.