எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:06 am

DIN

தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு)  பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே அமைதியும், நல்ல உறவும் நிலவுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை தொடங்கி உள்ளது. 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருது பரிசு பெற விண்ணப்பிக்கும், தகுதியான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள்.  
அந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை தொழிலாளர் துறையின் WW​W.​L​A​B​O​U​R.​T​N.​G​O​V.​I​N/​L​A​B​O​UR   என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப இம்மாதம் 28 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.