கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திராவிட அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், திராவிட அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:40 am

DIN

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், திராவிட அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்திய நாட்டில் வாக்குரிமை உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம்; எவரும் அரசியல் கட்சி தொடங்கலாம். கமல்ஹாசன் 40 ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றிவிட்டு இப்போது தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், பினராயி விஜயன் உள்ளிட்டோரை கமல்ஹாசன் சந்தித்தைப் பார்க்கும்போது, அகில இந்திய அரசியலில் ஈடுபடுவாரா என்பது அவர் கூறும்போது தெரியவரும். பொதுவாக,  திராவிட பாணி அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறுவது இனிவரும் காலத்தில் எடுபடாது. நாம் எல்லாரும் திராவிடர்கள்தான். 
கன்னியாகுமரியில் புதிய துறைமுகம் அமைக்க சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சென்னையில் துறைமுகம் வந்தபோதும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்றார்கள். ஆனால், அங்கு இப்போதும் மீன்பிடித் தொழில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
எனவே, எந்தத் திட்டத்தை எங்கு தொடங்கினாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தைத்தான் செயல்படுத்துவோம். மக்களுக்கு எதிரான திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம். 
தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினேன். சாதகமான பதில் கூறியுள்ளார். சில இடங்களில் சாலைப் பணி நடப்பதால் அது முடிந்ததும் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார் என்றார் அவர்.
பாஜக மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாநில வர்த்தக அணித் தலைவர் ஏ.என். ராஜக்கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி. செந்தில்வேல், திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணகுமார், நகரத் தலைவர்  சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், உள்ளாட்சிப் பிரிவுச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.