தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் கோவில்பட்டி நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரு இடங்களில் நடைபெற்றது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன் மற்றும் வேலாயுதபுரத்தில் கே.வி.கே.சாமி படிப்பகம் அருகே நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் கா. கருணாநிதி தலைமை வகித்தார். நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பா. முகேஷ், அ. அன்புநிதி, தா. மாலன்ராஜ், க. சமுத்திரப்பாண்டி, ந. சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ. கீதாஜீவன், தலைமைக் கழகப் பேச்சாளர் ரம்ஜான் பேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், திமுக மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்டத் துணைச் செயலர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் பா.மு. பாண்டியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரா. ராமர், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம், வழக்குரைஞரணியைச் சேர்ந்த மு. ராமசந்திரன் உள்பட நகர மகளிரணி, மாணவரணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, விவசாய அணி, கலை இலக்கிய அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
24ஆவது வார்டு கிளைச் செயலர் பாஸ்கரன் வரவேற்றார். 6ஆவது வார்டு செயலர் மா. சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நகர திமுக அணி அமைப்பாளர் கா. மகேந்திரன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

