புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோவில்பட்டி அருகே கார் மோதி விவசாயி சாவு

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:06 am

DIN

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள ஆழ்வார்னேரியைச் சேர்ந்த கோவில்மணி மகன் சார்லஸ் (28). இவர் காரில் சாத்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூரையடுத்த குமாரபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இடைசெவல் காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் (65) சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான அதே பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் முருகன்(43) காயமடைந்தார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் சார்லஸை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.