தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சாத்தான்குளத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகளால் மக்கள் அவதி

சாத்தான்குளம் பகுதியை வாரத்தில் 3 நாள்கள் புறக்கணிக்கும் அரசு  பேருந்துகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:02 am IST

சாத்தான்குளம் பகுதியை வாரத்தில் 3 நாள்கள் புறக்கணிக்கும் அரசு  பேருந்துகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
சாத்தான்குளம் பகுதிக்கு திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து  40 க்கு மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதன்மூலம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாசரேத், திருச்செந்தூர்,  ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு  சென்று திரும்புகின்றனர். 
இதில் அரசு பேருந்து தடம் எண் 138ஏ   திருநெல்வேலியில் இருந்து பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு இயக்கப்படுகிறது.    இப்பேருந்து  திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் பகுதிக்கு வரும் முதல் பேருந்தாக உள்ளது. இதில் வெளியூர்களுக்கு சென்று திரும்புபவர்கள் அதிகாலை ஊர் திரும்ப ஏதுவாக உள்ளது. இந்த  பேருந்தானது சனிக்கிழமையில் இருந்து திங்கள்கிழமை வரை இயங்குவது இல்லை என  பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல்  திருநெல்வேலியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் பேருந்து,  திருநெல்வேலியில் இருந்து உடன்குடி செல்லும் பேருந்து ஆகியவை முறையாக இயக்கப்படாமல் அவ்வப்போது இயக்கப்படுகினறன.   திருநெல்வேலியில் இருந்து கலுங்குவிளை வழியாக சாத்தான்குளம் வரும் அரசுப் பேருந்து, திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் வழியாக பெரியதாழை செல்லும் பேருந்து கடந்த 10 நாள்களாக திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாத்தான்குளம் பகுதியில் இரு வழித்தடத்தில் ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தடம் எண் 504 எஸ் அரசு பேருந்து சாத்தான்குளத்தில் இருந்து  திருநெல்வேலி வழியாக மதுரைக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தம் செய்யப்பட்டு அதே வழித்தடத்தில்  திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் வந்து செல்லும்  பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் தடம் எண்  173ஏ அரசு பேருந்து  திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி வழியாக மணப்பாடுக்கு இயங்கி வந்தது. அது தற்போது நிறுத்தம் செய்யப்பட்டு சாத்தான்குளம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த இரு வழிதடங்களுக்கு ஒரு பேருந்து மட்டுமே மாறி மாறி இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து பயணி ஒருவர் கூறியது:  சாத்தான்குளம் பகுதிக்கு அரசு பேருந்துகள் விடுமுறை நாள்களில் இயக்கப்படாமல் இப்பகுதியை புறக்கணிப்பதால் இதனை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய  பேருந்துகள் சாத்தான்குளம் பகுதிக்கு இன்னும் இயக்கப்படவில்லை. 
எல்எஸ்எஸ் பேருந்துகளுக்கு புதிய பேருந்து  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . போக்குவரத்து அதிகாரிகள் இதனை கவனித்து  இப்பகுதியில்  இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் எல்லா நாள்களிலும் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.