அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 996 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 996 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.

Updated On :24 ஜூலை 2018, 12:53 am IST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 996 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அனைத்துத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தூத்துக்குடி மாவட்டத்துக்காக முதல்வர் அறிவித்த அனைத்து புதிய திட்டங்களையும் அலுவலர்கள் சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும். பொலிவுறு நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், வடிகால் பணிகள், எல்ஈடி மின் விளக்கு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரூ. 996 கோடியில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகளை விரைந்து தொடங்கி, 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மின்சாரம், கழிவறை, குடிநீர் வசதி இல்லாத மையங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் மூலம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏற்கெனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 446 வீடுகளுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதியையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் பிரசாந்த், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.