தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

தூத்துக்குடி கலவரம்:சிபிசிஐடி போலீஸார் ஆய்வு நீடிப்பு

தூத்துக்குடியில் கலவரத்தின்போது தீவைத்து சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை சிபிசிஐடி பிரிவு போலீஸார் திங்கள்கிழமை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். 

Updated On :26 ஜூன் 2018, 7:53 am IST

தூத்துக்குடியில் கலவரத்தின்போது தீவைத்து சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை சிபிசிஐடி பிரிவு போலீஸார் திங்கள்கிழமை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும், அதற்கு மறுநாளும் கலவரம் வெடித்தது. போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி பிரிவு போலீஸார் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிபிசிஐடி பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன் தலைமையில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 100 பேர் கடந்த 23ஆம் தேதி முதல் தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாநகரில் ஞாயிற்றுக்கிழமை ஏறத்தாழ 6 மணி நேரம் நடத்தப்பட்ட தடயங்கள் சேகரிப்புப் பணியின்போது இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 3ஆவது நாளாக திங்கள்கிழமை தடயங்கள் சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி பிரிவு போலீஸார் ஈடுபட்டனர்.
கலவரத்தின்போது தீவைத்து எரிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.