வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாகம்

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர், மாணவிகளுக்கான சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 2:05 am

DIN

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர், மாணவிகளுக்கான சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. 
இதையொட்டி கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், கோயில் வளாகத்தில் கணபதி பூஜை,  கும்ப கலச பூஜை நடைபெற்றது. 
பின்னர் யாகசாலை பூஜை,  சரஸ்வதி மூலமந்திர ஹோமம்,  நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றன.  தொடர்ந்து,  அரசுப் பொதுத் தேர்வு எழுதும் 10,  11,  12ஆம் வகுப்பு மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு,  தேர்வை சிறப்பாகவும்,  ஞாபகசக்தியுடன் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
சுவாமி, அம்பாளுக்கு 18 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் தலைவர் ராஜபாண்டி,  பொருளாளர் சுப்பிரமணி உள்பட திரளான பக்தர்கள்,  மாணவர்,  மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.