காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தம்பி கடையில் தேங்காயை திருடி அண்ணன் கடையில் விற்க முயன்றவர் கைது

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில், தம்பி கடையில் தேங்காயை திருடி  அண்ணன் கடையில் விற்க முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:04 am

DIN

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில், தம்பி கடையில் தேங்காயை திருடி  அண்ணன் கடையில் விற்க முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பேய்க்குளம் குறுகால்பேரியைச் சேர்ந்த மு. 
ஸ்ரீதர்(47) காய்கனி கடையும்,  அவரது தம்பி சுந்தர் மளிகை கடையும் நடத்தி வருகின்றனர். இருவரும் விவசாயிகள் கொண்டு வரும் தேங்காயை மொத்த விலைக்கு வாங்கி விற்று வருகின்றனர். இந்நிலையில்  கடந்த வாரம் விவசாயி ஒருவர் தேங்காய் மூட்டை கொண்டு வந்து சுந்தர் கடையில் விற்றாராம். பின்னர் அந்த  மூட்டை காணாமல் போனதாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீதர் கடைக்கு வந்த  ஒருவர், விற்பனைக்கு 21 தேங்காய் கொண்டு வந்தாராம்.  அவரிடம் விசாரித்ததில், முன்னுக்குப் முரணான தகவலை கூறினாராம்.
 இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸுக்கு ஸ்ரீதர் தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில்  உதவி ஆய்வாளர்  ஆழ்வார் விரைந்து வந்து  அந்த நபரைப் பிடித்து  விசாரித்தார்.  அவர் ஓட்டபிடாரம்  அருகே  உள்ள புதியமுத்தூரைச் சேர்ந்த பா. துரைப்பாண்டி (59) எனவும்,  சுந்தரின் மளிகை கடையில் தேங்காயை திருடி ஸ்ரீதரின் காய்கனி கடையில் விற்க வந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் பேய்க்குளம் பஜாரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த வாரம் மளிகை கடையில் தேங்காயை திருடியது  இவர்தான் என உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து துரைப்பாண்டியை போலிஸார் புதன்கிழமை கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.