ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கழுகுமலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

கழுகுமலையில் ரூ.50 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர்கள் புதன்கிழமை தொடங்கிவைத்தனர். 

Updated On :29 மார்ச் 2018, 12:24 am

கழுகுமலையில் ரூ.50 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர்கள் புதன்கிழமை தொடங்கிவைத்தனர். 
தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டம் (2017-18)  மூலம் கழுகுமலை ஆறுமுக நகரில் ரூ.50 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. 
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி,  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் பணியை தொடங்கிவைத்தனர். 
மேலும், கழுகுமலை பேரூராட்சி குதிரைலாயர் தெருவில் ரூ.3 லட்சம், தியாகராஜர் தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய மோட்டார் அறை மற்றும் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். 
நிகழ்ச்சியில்,  கோட்டாட்சியர் அனிதா,  வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம்,  வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ்,  அதிமுக மாவட்டச் செயலர் சி.த.செல்லப்பாண்டியன்,  இனாம்மணியாச்சி ஊராட்சி செயலர் ரமேஷ்,  அதிமுக நிர்வாகிகள் செண்பகமூர்த்தி,  வேலுமணி,  அன்புராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.