தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

போராட்ட இடத்தில் சார்ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் அ.குமரெட்டியாபுரத்திலும், அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம்

Updated On :29 மார்ச் 2018, 1:57 am

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் அ.குமரெட்டியாபுரத்திலும், அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமாரகிரி பகுதிகளிலும் தூத்துக்குடி சார்ஆட்சியர் பிரசாந்த் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர்கள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
குடிநீர், காற்று ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து இந்த 3 கிராமங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், ஆய்வுக்காக குடிநீர் மாதிரிகளை சேகரித்தனர். ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சார்ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சார்ஆட்சியர் கூறும்போது,  மாதந்தோறும் நடத்தப்படும் வழக்கமான ஆய்வுதான் என்றும், இப்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் 
தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.