மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மது விற்பனை:  3 பேர் கைது

கோவில்பட்டி  பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :29 மார்ச் 2018, 12:25 am

கோவில்பட்டி  பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 
துரைச்சாமிபுரம் துணை மின் நிலையம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் தேவராஜை (39) போலீஸார் புதன்கிழமை கைது செய்து,  அவரிடமிருந்த 5  மது பாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். 
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசந்திரவடிவேல் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பிரதான சாலையில் மது விற்பனையில் ஈடுபட்ட, சாஸ்திரி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் முருகேசனை(42) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 10 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். 
 நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகாதேவி தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கடலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மின்வாரிய அலுவலகம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட எட்டயபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அய்யப்பனை(43)  கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 4  மது பாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.