ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

விளாத்திகுளத்தில் இயற்கை பாதுகாப்பு கருத்தரங்கம்

விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்க பசுமை மன்றம் சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 12:25 am

விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்க பசுமை மன்றம் சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் இயக்குநர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ஆன்றோ, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனீஸ்வரன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், இயற்கையை கொண்டாடுவோம், பசுமையை பாதுகாப்போம் எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விநாடி வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமங்களை பசுமையாக உருவாக்குவது, பராமரிப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் ரோஸ்லின், மு.கா. இப்ராகிம், ஜெலாஸ்டின், ஆக்னஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி கனகா வரவேற்றார்.  மாணவி தமிழ்மணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.