சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பெண்ணிடம் 21 பவுன் நகைப் பறிப்பு

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் 21 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 4:11 am

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் 21 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை, பாக்கியலட்சுமி நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த சுந்தரபாண்டி மனைவி தங்க முத்தம்மாள் (64). இவருக்குச் சொந்தமான திருமண மண்டபம், வணிக வளாகம் அதே பகுதியில் உள்ளது. இவர் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்துவந்த 2 இளைஞர்கள் தங்க முத்தம்மாள் அணிந்திருந்த 21 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம். தங்க முத்தம்மாள் கூச்சலிட்டதால் அப்பகுதியிலிருந்த சிலர் அந்த இளைஞர்களை விரட்டிச் சென்றனர். எனினும், பிடிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.