கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 12:25 am

ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.
வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வமணி, வேளாண் இணை இயக்குநர்(பொ) முத்துஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி சார்-ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா அரசின் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கிவைத்துப் பேசுகையில், விவசாயிகளிடமிருந்து முதல் ரக நெல் கிலோ ரூ.16.60-க்கும்,  இரண்டாம் ரக நெல் கிலோ ரூ.16-க்கும் பெறப்படுகிறது என்றார்.
விழாவில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன்,  வட்ட வழங்கல் அலுவலர் சுல்தான்,  வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினராஜ்,  கஸ்பா விவசாய சங்கத்  தலைவர் மாடசாமி, வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன், சமூக ஆர்வலர் சித்திரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.