நாசரேத் அருகே குடிநீர் குழாயில் மொபெட் மோதல்: முதியவர் சாவு
நாசரேத் அருகே தெரு குழாயில் மொபெட் மோதியதில் முதியவர் சனிக்கிழமை இறந்தார்.


நாசரேத் அருகே தெரு குழாயில் மொபெட் மோதியதில் முதியவர் சனிக்கிழமை இறந்தார்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் குறுகால்பேரியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (81). சனிக்கிழமை பால்ராஜ் அவரது மொபெட்டில் நாசரேத் சென்றாராம். அங்கு பொருள்கள் வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினாராம். நாசரேத் அடுத்துள்ள வாலசுப்பிரமணியபுரம் பகுதியில் வந்தபோது மொபெட் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்து குடிநீர் குழாயில் மோதியதாம். இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்த பால்ராஜுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...