இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் திறப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தை கோட்டாட்சியர் தங்கவேலு திறந்து வைத்தார்.

Updated On :14 மே 2018, 7:19 pm

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தை கோட்டாட்சியர் தங்கவேலு திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதியதாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை கோட்டாட்சியர் தங்கவேலு திறந்து வைத்தார். வட்டாட்சியர் தில்லைபாண்டி முன்னிலை வகித்தார். சாயம் கலந்த பச்சை பட்டாணி, சாயம் கலந்த தேயிலை தூள், பப்பாளி விதை கலந்த மிளகு தூள், சீனி கலந்த தேன், அயோடின் கலக்காத உப்பு, காலாவதியான உணவு பொருள்கள், அவற்றின் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரம் இல்லாத உணவு பாக்கெட்டுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. போலிகளை கண்டறியும் முறைகள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்முத்து ஞானசேகரன் செயல் விளக்கமளித்தார். கோடை காலம் முழுவதும் இம்முகாம் நடைபெறும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.