தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே புதிதாக அரசு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் என். வெங்கடேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அரசு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: விளாத்திக்குளம் அருகேயுள்ள ஜமீன்கோடாங்கிபட்டி ஊராட்சிக்குள்பட்ட மகாராஜபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: எங்களது பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் புதிதாக அரசு மதுக்கடை திறக்க தற்போது ஏற்பாடு நடந்து வருகிறது. அரசுப் பள்ளியும் அதே பகுதியில் அமைந்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை தடுக்க வேண்டும்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குடும்பத்தினருடன் மனு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் தூத்துக்குடி கிளை சார்பில் அதன் தலைவர் முருகன், செயலர் தர்மராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் தூத்துக்குடி பணிமனை கிளை மேலாளர், தொழிலாளர்களுக்கு ஓய்வு அளிக்காமல் தொடர்ச்சியாக 12 நாள்கள் வரை தொலைதூர ஊர்களுக்கு பணிபுரிய நிர்ப்பந்தம் செய்கிறார். தொழிலாளர்களின் நலன்கருதி அந்த கிளை மேலாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீட்டுத் தொகை: தூத்துக்குடி மாவட்டம், தெற்கு வண்டானம் கிராம பொதுமக்கள் அளித்த மனு:
2016-17 ஆம் ஆண்டு எங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் உளுந்து, பாசி, பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு தொகை செலுத்தி வந்தோம்.
இதில் மக்காளச்சோளத்துக்கு மட்டும் காப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, பயிர்க் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

