உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் உள்ள நான்கு குளங்களும் முழுமையாக நிரம்பும் வரை சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் சட்டபேரவை உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் சடையனேரி கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் ஆண்டுக்காண்டு பருவமழை குறைந்துகொண்டே வந்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டே சென்றது. இதனால் கடல் நீர் உள்புகுந்ததால் விவசாய நிலங்கள் அனைத்தும் பாழானது.
தூத்துக்குடி மாவட்டத்திலேயே உடன்குடி ஒன்றியத்தில்தான் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே போவதாக மத்திய நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீர், தற்போது சடையனேரி கால்வாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. உடன்குடி ஒன்றியத்தில் உள்ள தாங்கைக்குளம், சடையனேரி குளம், சாத்தான்குளம் ஒன்றியத்தில் புத்தன்தருவைக் குளம், வைரவன்குளம் ஆகியவை முழுமையாக நிரம்பும் வரை இக்கால்வாயில் தண்ணீர் விட வேண்டும் என குறிப்பட்டார்.
மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஒன்றியச் செயலர்கள் பாலசிங் (உடன்குடி), ரமேஷ் (திருச்செந்தூர்), ஊராட்சிச் செயலர்கள் க.இளங்கோ (பரமன்குறிச்சி), ஜெரால்டு தனராஜ் (மெஞ்ஞானபுரம்), முருகேசன் (செம்மறிக்குளம்), மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், கிளைச் செயலர்கள் சித்திரைபாண்டி, ராமச்சந்திரன், சந்திரவேல் ஆகியோர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

