நாலாட்டின்புத்தூர் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வானரமுட்டி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆய்வாளர் ஜூடி தலைமை வகித்து, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகனத்தில் பின்னால் பயணிப்பவர்கள் இருவரும் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என்றும், செல்லிடப்பேசியை பேசியபடி வாகனத்தை ஓட்டக்கூடாது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சீட்-பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும், வாகன ஓட்டுநர்கள் மதுவை அருந்திய நிலையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும், அரசு விதிகளின்படி பயணிகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டுமே தவிர, சட்ட விதிமுறைகளை மீறக்கூடாது எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தினர்.
இதில், நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஆட்டோ, சுமை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 16-ல் தவெக முழு தேர்தல் அறிக்கை: விஜய்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ருதுராஜ்?

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமிருக்கிறதா?

விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

