பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான புத்துணர்வு சுற்றுலா

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான புத்துணர்வு சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து  திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:52 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான புத்துணர்வு சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து  திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை புத்துணர்வு சுற்றுலா அழைத்து செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட புத்துணர்வு சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்து சுற்றுலா செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  மனவளர்ச்சி குன்றிய ஆரம்ப நிலை குழந்தைகளுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசின் உத்தரவின்படி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்,  புத்துணர்வு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகள்,  காது கேளாதோர் குழந்தைகள்,   குழந்தைகளின் பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் என 40 நபர்கள் புத்துணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.  இவர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, கயத்தாறு வீரபாண்டிய கட்டப்பொம்மன் மணிமண்டபம்,  எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லம், பாரதியார் நினைவு மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர் என்றார். 
நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன்,  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மு. ஜெயசீலி,  மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.