கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

இலுப்பையூரணியில் கோ பூஜை

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் உலக மக்கள் நலன் வேண்டி கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 2:38 am

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் உலக மக்கள் நலன் வேண்டி கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இலுப்பையூரணி ஸ்ரீ நரசிம்ஹ தீர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பாலகோபால கோ சாலையில் உலக மக்களின் நலன் வேண்டியும், மழை வேண்டியும், இயற்கை வளம் செழிக்கவும் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை நடைபெற்றது. 
முன்னதாக கணபதி ஹோமம், மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, இலுப்பையூரணி சீதாராம சுவாமி தலைமையில் பஜனையும், கோ பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
ஏற்பாடுகளை ஸ்ரீ பாலகோபால கோசாலை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.