காவலர் மற்றம் ஜெயில் வார்டர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான எழுத்து தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1,486 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 613 பெண் விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் மேற்பார்வையில் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவிருக்கிறது.
இதில். செப். 3, 4 தேதிகளில் விண்ணப்பதாரர்களுக்கான ஆற்றல் சோதனையும், செப். 5, 6 தேதிகளில் உடல் திறனாய்வுத் தேர்வும் நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு செப். 7ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.
உடல் தகுதி தேர்வுப் பணிக்காக கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு பணிகள் குறித்தும் தேர்வு நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தூத்துக்குடி தருவை மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா குறிப்புகள், அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் வனிதா, பொன்ராமு, ஸ்டான்லி ஜோன்ஸ், துணை கண்காணிப்பாளர்கள் பிரகாஷ், தர்மலிங்கம், மகேந்திரன் மற்றும் தேர்வு அலுவலுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

