தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்செந்தூர் கிளை சார்பில் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வலியுறுத்தி குரும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத் தலைவர் வி. நடேசஆதித்தன் தலைமை வகித்தார். செயலர் எம். ராஜா, துணைச் செயலர்கள் ராஜலிங்கம், ஏ. முருகன், துணைத் தலைவர் கோவிந்தன் மற்றும் பொருளாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி பொதுச்செயலர் இ. கிருஷ்ணராஜ், எழுத்தாளர் ஆறுமுக பெருமாள், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம். ராமையா மற்றும் மணிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பகுதியாக போடப்பட்டநாலுமாவடி-ஏரல் சாலையை முழுமையாக தரமாக புதுப்பிக்கவேண்டும். அங்கமங்கலம் புதுக்கிராமத்தில் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றி, அம்மக்களுக்கு வழங்க வேண்டும், குளங்களை தூர்வாரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நயினார், அரசகுமார், முத்து, ராம்ராஜ், ராஜகோபால், காசிலிங்கம், பட்டு, முனியாண்டி, சேகர், ஜான்பாண்டி, இராஜேந்திரன், கணேசன் மற்றும் என். முனியம்மாள் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

