/

கோவில்பட்டியில் மழை

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 15  நிமிடம் பெய்த பலத்த மழையினால் சாலையில்  மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 2:38 am

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 15  நிமிடம் பெய்த பலத்த மழையினால் சாலையில்  மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பிற்பகல் சுமார் 1.30 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை கால் மணி நேரம் நீடித்தது. இந்த மழையினால் கோவில்பட்டி பசுவந்தனை சாலை, பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் சாலையில் ஓடத்தொடங்கியது. 
தற்போது தொடங்கியுள்ள மழையிலே கழிவுநீருடன் மழைநீர் சாலையில் ஓடுகிறது. எனவே, மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஓடைகளையும் தூர்வார வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள், பாதசாரிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.