மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில்  நாளை 3 கிராமங்களில் சுனாமி பயிற்சி ஒத்திகை

தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 5ஆம் தேதி 3 கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:58 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 5ஆம் தேதி 3 கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது,  இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து  தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து,  செப்டம்பர் 5ஆம் தேதி மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துகின்றது.
சுனாமி வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன்னறிவிப்புகள் பெறப்பட்டு அத்தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது ஒத்திகையின் மூலம் கண்டறியப்படும்.
மாதிரி பயிற்சி ஒத்திகையானது,  தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோ நகர் மீளவிட்டான் பகுதி 2, சாத்தான்குளம் வட்டம் படுக்கப்பத்து,  விளாத்திகுளம் வட்டம் வேம்பார் ஆகிய கடலோர கிராமங்களில் நடைபெறுகிறது. 
செப். 5ஆம் தேதி நடைபெறும் சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியானது,  ஒரு மாதிரி ஒத்திகை பயிற்சி மட்டுமே.  இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் பீதியோ அடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.