திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

கேரளத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணப் பொருள்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ப்ரண்ட்ஸ் ஆப் கோவில்பட்டி அமைப்பின் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ப்ரண்ட்ஸ் ஆப் கோவில்பட்டி அமைப்பின் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. 
அந்த மாநில மக்களுக்கு உதவிடும் வகையில்,    ப்ரண்ட்ஸ் ஆப் கோவில்பட்டி  அமைப்பின்சார்பில் சமையல் பாத்திரங்கள், உணவுப் பொருள்கள், பெட்-ஷீட் மற்றும் மருந்துப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, கேரளத்தின் வண்டிப்பெரியார் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.  நிகழ்ச்சியில், தொழிலதிபர் அந்தோணிசாமி, ஆசிரியர்கள் அந்தோணி, லூயிஸ், பெருமாள் மற்றும் தன்னார்வலர்கள்  கலந்து கொண்டனர்.

நாசரேத் சாலமோன் பள்ளி சார்பில்....
நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி  சார்பில், கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன. 
பள்ளி நிர்வாகத்தினர்  அரிசி, பருப்பு, பிஸ்கட்,போர்வைகள், ஆடைகள், பற்பசை போன்ற அத்தியாவசிய பொருள்களை  சேகரித்து தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன், தலைவர் சத்தியவதி மனோகரன், பள்ளி முதல்வர் அனிஜெரால்டு, உதவிமுதல்வர் மகிலாசரவணன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.