
மது விற்பனை: இருவர் கைது
கோவில்பட்டி அருகே மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குருமலை விலக்கு அருகே மதுவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட மந்தித்தோப்பு துளசிங்க நகரைச் சேர்ந்த க.கருத்தப்பாண்டியை(37) கைது செய்து, அவரிடமிருந்த 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல், பசுவந்தனை சாலை பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணியபுரம் 6ஆவது தெருவைச் சேர்ந்த மு.சுப்புராஜை (37) கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 45 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





