ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

"தொழில் தொடங்க விரும்பும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த தொழில் தொடங்க விரும்பும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த தொழில் தொடங்க விரும்பும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  2017-2018ஆம் நிதியாண்டில் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் சொந்த தொழில் தொடங்க ஒரு நபருக்கு ரூ.20,000 வீதம் 10 நபருக்கு நிதியுதவி ரூ.2,00,000 பகிர்ந்தளிக்க தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பான விவரங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு செப். 25ஆம் தேதி மாலை 4 மணிக்குள் (ஆதார் அடையாள அட்டை, வாரிய அடையாள அட்டை,  குடும்ப அட்டை, விருப்பம் தெரிவிக்கும் தொழில்) போன்ற சான்றுகளுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.