இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:00 am IST

கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதிச் செயலர் ராஜ்குமார், சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர்கள் முருகன், குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கட்சியின்,  மாநிலத் துணைச் செயலர் கலைவேந்தன், கட்சியின் வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைச்செயலர் பெஞ்சமின் பிராங்க்ளின், மாவட்டத் துணைச் செயலர் பாஸ்டர் மோகன், ஒன்றியச் செயலர்கள் மாடசாமி (கோவில்பட்டி), மாதவன் (விளாத்திகுளம்), சங்கர் (புதூர்), காளிதாஸ் (கயத்தாறு), நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் செய்வது, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மக்களவைத் தேர்தல் பணி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.