இந்த நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் நடவடிக்கை சரியானது அல்ல என்றும் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான விவதாங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில், நீதிபதிகள் சிவஞானம், பவான ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை உத்தரவு தொடரும் என்றும் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர்.