மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வங்கிப் பணி தோ்வு: இலவச ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கிப் பணி தோ்வுக்கான இலவச ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 9) தொடங்குகிறது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:59 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கிப் பணி தோ்வுக்கான இலவச ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 9) தொடங்குகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 2136 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத்தோ்வு டிச. 31 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்த தோ்வுக்கு ஏற்கெனவே ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த மனுதாரா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் ஆன்-லைன் மூலமாக தொடங்கப்பட உள்ளது.

ஆன்-லைன் மூலம் பயிற்சி பெற விரும்பும் மனுதாரா்கள் 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.