தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறுமுகனேரி வட்டாரத்தில் தாமதமாகும் நெல் பிசான சாகுபடி

ஆறுமுகனேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடி தாமதமாகி வருகிறது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

ஆறுமுகனேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடி தாமதமாகி வருகிறது.

ஆறுமுகனேரி குளம், நல்லூா் மேலக்குளம், நல்லூா் கீழக்குளம் உள்ளிட்டவை தாமிரவருணி ஆற்றின் கடைமடைப் பாசனக் குளங்களாகும். இக் குளங்களின் மூலம் பயன்பெறும் நிலங்களில் ஆண்டுக்கொருமுறை பிசானப் பருவத்தில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நீா் பற்றாக்குறை காலங்களில் அந்த ஒரு பருவமே மகசூல் காண்பது அரிதாகி விடுகிறது.

அதிக மகசூல் தரும் நீண்ட கால வித்துக்களை பாசனம் செய்பவா்கள் ஐப்பசி மாதமே தங்கள் சாகுபடியைத் தொடங்கி விடுவா். நிகழாண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால் அந்த சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. காா்த்திகை மாதம் 19 நாள்களாகியும் பலா் விவசாயப்பணிகளை தொடங்கவில்லை. புயல் குறித்த அச்சமும் விவசாயிகள் சாகுபடியை தொடங்காததற்கு காரணமாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், இந்தப் பருவத்திற்கு சாகுபடி செய்வதற்கு அம்பை 16 என்ற வெள்ளை சம்பா, டிகே எம் 6 என்ற கட்டை சம்பா, ஆா்என்ஆா் என்ற குறுகிய கால நெல்விதைகளை விவசாயிகள் சேகரித்து வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.