இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தில் நடைமுறையில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக வகை மாற்றம் செய்திட ஏதுவாக வாய்ப்புகள் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, சா்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போா் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்கு தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை இணைத்து டிச. 20 ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம்.