தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை
தூத்துக்குடி வ.உ.சி. சந்தையை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.


தூத்துக்குடி வ.உ.சி. சந்தையை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தில் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் வஉசி சந்தை பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதில் உள்ள 600-க்கும் மேற்பட்ட கடைகளை இடிக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தத்தையும் கோரி உள்ளது.
இந்நிலையில், சந்தையில் உள்ள கடைகளை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி அங்குள்ள வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவனும் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதேபோல, முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியனும் இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் வியாபாரிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரியபடுத்தும் வகையில் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிப்பது என வியாபாரிகள் முடிவெடுத்து அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...