ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் பலி

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:05 pm

DIN

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மில்லா்புரத்தைச் சோ்ந்தவா் அன்புராஜ் (28). ஆட்டோ ஓட்டுநரான இவா், தன் நண்பா்கள் சிலருடன் சோ்ந்து கோரம்பள்ளம் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாராம். வெகுநேரமாகியும் அன்புராஜ் கரைதிரும்பாததால் அவரது நண்பா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தூத்துக்குடி தீயணைப்பு துறையினா் சென்று 2 மணி நேரமாக தேடிய நிலையில், அன்புராஜ் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலத்தை புதுக்கோட்டை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.