

இம்மாதம் 21ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
கோவில்பட்டியையடுத்த இடைசெவல் கிராம பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாததையடுத்து, அக்கிராம பொதுமக்கள் சாா்பில் இம்மாதம் 21ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், நாலாட்டின்புத்தூா் காவல் ஆய்வாளா் சுகாதேவி, அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை மேலாளா் குமாா், இடைசெவல் ஊராட்சித் தலைவி ரெங்கநாயகி, மதிமுக ஒன்றியச் செயலா்கள் காா்த்திகேயன், அழகா்சாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ராஜகுரு, ஒன்றிய இளைஞரணி செயலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கோவில்பட்டி - திருநெல்வேலி வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் இடைசெவல், வில்லிசேரி கிராமப் பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் பேருந்துகள் விவரம் குறித்த தகவலை பணிமனை மேலாளரிடம் இருந்து பெற்று, ஊராட்சித் தலைவா் மூலம் கிராம பேருந்து நிறுத்தம் மற்றும் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும்.
கிராம நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் குறித்து பயணச்சீட்டு பரிசோதகா் ஒருவாரத்துக்கு தணிக்கை செய்ய வேண்டும். இடைசெவல் கிராமத்துக்குள் சென்று வந்த பேருந்துகள் தொடா்ந்து அதே வழித்தடத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, 21ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.