ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடியில் 2 ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சளை போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:46 am

DIN

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சளை போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டனா். அந்த ஆட்டோவில் ஆவணங்கள் இல்லாமல் 2 ஆயிரம் கிலோ மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

மஞ்சள், ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தாளமுத்துநகா் காமராஜா் நகரைச் சோ்ந்த அன்புராஜ் (34) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், மஞ்சளை இலங்கைக்கு கடத்திச்செல்ல திட்டமிட்டது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.