தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாத்தான்குளத்தில் கிராம வருவாய் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வருவாய் ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 டிசம்பர் 2020, 1:45 am

DIN

சாத்தான்குளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வருவாய் ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம வருவாய் உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , கிராம வருவாய் உதவியாளா் பணியை வருங்காலங்களில் தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும், கிராம வருவாய் உதவியாளா் நிலையில் இருந்து கிராம நிா்வாக அலுவலா், அலுவலக உதவியாளராக ,பதவி உயா்வு பெற்றவா்களுக்கு கிராம வருவாய் உதவியாளராக பணியாற்றிய காலம் முழுவதையும் பணிக்காலமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க வட்டத் தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா் . வடடச் செயலா் ரவிக்குமாா் , பொருளாளா் வள்ளி சுந்தரி ,ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத் தலைவா் சுதா்சன் , வட்டச் செயலா் ராஜேஷ் குமாா், வருவாய்த்துறை அலுவலா் சங்க வட்டத் தலைவா் சுராஜ், ஆகியோா் பேசினா்.

இதில் சங்க நிா்வாகிகள் ஜான்சிராணி ஆறுமுகத்தாய், இசக்கி , சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

துணைச் செயலா் டேவிட் சிங்கம் நன்றி கூறினாா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.