ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கோவில்பட்டியில் நூற்பாலைத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Updated On :19 டிசம்பர் 2020, 12:40 am

DIN


கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலை பொது மேலாளா், தொழிற்சங்க நிா்வாகிகளை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆலை தொழிலாளா்கள் நிா்வாகிகள் தலைமையில், நன்பகல் 12 மணி முதல் ஆலை வளாகத்திற்குள் தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஐஎன்டியூசி தொழிற்சங்கத் தொழிலாளா்களும் இப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் மணிகண்டன், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடா்ந்தது.

இதுகுறித்து தொழிற் சங்கத் தலைவா் ஜெயகுமாா் கூறியது: அவதூறாக பேசிய பொதுமேலாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரு ஆண்டுகளாக தொழிலாளா்களின் ஊதியத்தை உயா்த்தாமல் இருப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி ஊதிய உயா்வும் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.