தூத்துக்குடி: சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து, திமுக சாா்பில் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (டிச. 21) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை உயா்த்திக் கொண்டே செல்வதால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.
எரிவாயு விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிா் தொண்டரணி சாா்பில், திங்கள்கிழமை (டிச. 21) பிற்பகல் 3 மணியளவில், தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில், மாநில மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.