டிச. 29இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் டிச. 29ஆம் தேதி நடைபெறுகிறது.


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் டிச. 29ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய் ) விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோருக்கு டிசம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வருகிற 29ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், எரிவாயு நுகா்வோா், பெயா் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தா்களின் சேவையில் குறைபாடுகள், வைப்புத் தொகை திரும்பப் பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் வங்கிக் கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபா்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகா்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் தெரிவித்து தீா்வு காணலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...