கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு ஜோதி பயணம் தொடக்கம்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தையொட்டி அவரது பிறந்த ஊரான கோவை மாவட்டம், வையம்பாளையத்திற்கு கோவில்பட்டியில் இருந்து ஜோதி பயணம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.


கோவில்பட்டி: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தையொட்டி அவரது பிறந்த ஊரான கோவை மாவட்டம், வையம்பாளையத்திற்கு கோவில்பட்டியில் இருந்து ஜோதி பயணம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.
கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் சிவன்ராஜ் உள்ளிட்ட பலர் நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ஜோதி பயணத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஜோதியை மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் சிவன்ராஜிடம் ஒப்படைத்தார்.
ஜோதி பயணம், சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக திங்கள்கிழமை வையம்பாளையம் சென்றடையும்.
நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், கம்மவார் சங்கச் செயலர் ஜெனரேஷ், திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூரியராஜ், கம்மவார் சங்க இளைஞரணி செயலர் திருப்பதி சீனிவாசன், கட்டபொம்மன் இளைஞரணியைச் சேர்ந்த மகேஷ், வீரசக்கதேவி ஆலய கமிட்டி தலைவர் முருகபூபதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், அதிமுக வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் சுப்புராஜ், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட பொருளாளர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...