திருச்செந்தூா்: திருச்செந்தூா் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது வலது கையில் சிலுவை படமும், கே என்று பச்சையும் குத்தப்பட்டுள்ளது. இறந்த பெண் யாா்? என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து திருக்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.